முத்துமாரியம்மன் கோவில் சிலைகள் உடைப்பு விருத்தாசலத்தில் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2024 05:10
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் முத்துமாரியம்மன் கோவில் கோபுர சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் நேரு தெருவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் கோபுரத்தில் இருந்த அம்மன் சிலை மற்றும் சிங்கம் சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் இரவு நேரங்களில் போதை நபர்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றனர். போதையில் சிலையை உடைத்திருக்கலாம்’ என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.