பழநி; பழநி கோயில் சென்று வர பயன்படுத்தப்படும், ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. பழநி கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்றும் நிமிடத்திற்குள் மலை கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன்படுகிறது. இன்று முதல் ரோப் கார் நிறுத்தப்பட்டு, வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டன. ரோப் கார் வடக்கயிறில் இருந்து பெட்டிகள் அகற்றப்பட்டு பணிகள் துவங்கின. பராமரிப்பின் போது பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் ஆகியவை புதிதாக மாற்றப்பட உள்ளன. 40 நாட்கள் இப்பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் வசதியை பயன்படுத்த கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.