7ம் நுாற்றாண்டு முருகர் சிலை காஞ்சி அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2024 08:10
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு செய்தனர். அங்குள்ள லட்சுமியம்மன் கோவில் அருகே, பழமை வாய்ந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை அப்பகுதியினர், அம்மனாக தரிசித்து வந்தனர். இச்சிலை, நின்ற நிலையில், தலை கூம்பு வடிவில் உள்ளது. கரந்த மகுட கவசம் மற்றும் முகம், காது ஆகிய பகுதிகளில், ஆபரணங்கள் அணியப்பட்டு உள்ளன. இடுப்பில் வேட்டியும், வலது கையில் வாள் ஆகிய ஆயுதங்கள் உள்ளன. இந்த சிலையில் சேதம் ஏற்பட்டிருப்பதால், அடையாளங்கள் முழுதும் சிதைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை, 7ம் நுாற்றாண்டின் முருகர் சிலை என, வரலாற்று மத்திய தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் ரமேஷ், கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் உறுதிப்படுத்தி உள்ளனர்.