Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றிக்குரிய விஜயதசமி கொண்டாடுவது ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம்; அனா.. ஆவன்னா எழுதி கல்வியை துவங்கிய குழந்தைகள்
எழுத்தின் அளவு:
தினமலர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம்; அனா.. ஆவன்னா எழுதி கல்வியை துவங்கிய குழந்தைகள்

பதிவு செய்த நாள்

12 அக்
2024
10:10

தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, திருப்பூர், ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீபுரம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் இன்று காலை 7:00 மணிக்குத் துவங்கியது.  ஆன்மிகச் சான்றோர், கல்வியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், உங்கள் குழந்தைகள் கல்வி ஞானத்தைத் துவங்குவதற்கான வாய்ப்பு இதுவாகும். விஜயதசமியன்று கல்வி, செல்வம், வீரம் போன்ற கலைகளில் காலடி எடுத்து வைப்பதன் வாயிலாக மேற்கொள்ளும் முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம், குழந்தைகள் கல்வி கற்க துவங்குவது, அவர்களின் கல்வி ஞானத்தை அதிகரிக்க செய்யும் என்பதன் அடிப்படையில், தினமலர் நாளிதழ் சார்பில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


இந்தாண்டு, தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சி, இன்று, காலை, 7:00 முதல், 10:00 மணி வரை திருப்பூர், அவிநாசி ரோடு, ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டனிலுள்ள, ஸ்ரீபுரம், ஜகன்மாதாஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் நடக்கிறது. சிறப்பு விருந்தினர்களாக, அவிநாசி திருப்புக்கொளியூர் ஆதினம் காமாட்சிதாச சுவாமிகள், ஸ்ரீசக்தி கல்விக்குழும சேர்மன் தங்கவேல், திருப்பூர், கிளாஸிக் போலோ நிர்வாக இயக்குனர் சிவராம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி திருக்கோவில் டிரஸ்ட் தலைவர் ஞானகுரு, ஆடிட்டர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். 


குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்; இந்நிகழ்ச்சிக்கு, இரண்டரை வயது முதல், ஆறு வயது குழந்தைகளை பெற்றோர் அழைத்து வரலாம். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு சிலேட், பென்சில், ரப்பர், கிரேயான், ஸ்கூல் பேக் உட்பட கல்வி பொருட்கள் வழங்கப்பட்டது. 


தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்விக் குழுமம் இணைந்து வழங்கும் அனா ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி கோவை, ராம் நகர் சத்தியமூர்த்தி ரோடு ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார்.


‘அ’னா … ‘ஆ’வன்னா… அரிச்சுவடி ஆரம்ப நிகழ்வு மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடைபெற்றது. கல்விக்கடவுள் சரஸ்வதியை வழிபடும் விஜயதசமியான இன்று ஏராளமான குழந்தைகளுக்கு கல்வி, கலைகள் சிறந்து விளங்க, பச்சரிசியில், குழந்தைகளின் விரலை கொண்டு அனா எழுதப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கோவை; டவுன்ஹால் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் அழைப்பு திருவிழாவில், பக்தர்கள் வேசுக்கோ, ... மேலும்
 
temple news
மதுரை; விஜயதசமியை முன்னிட்டு தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. புரட்டாசி 4ம் சனிக்கிழமை  அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar