திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நவராத்திரி லட்சார்ச்சனை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2024 11:10
மயிலாடுதுறை; திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 10-ம் நாள் நவராத்திரி லட்சார்ச்சனை நிறைவு நாள் விழ தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தர ஆகிய மூவராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் இக்கோவிலும் ஒன்று. இங்கு அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அட்டவிரட்ட தளங்களில் ஒன்றான இக்கோவில் காலசம்கார மூர்த்தி உற்சவராக அருள் பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். மணி விழா . சதாபிஷேகம், மற்றும் ஆயுல் ஹோமம் உள்ளிட்டவற்றை இங்கு நடத்துவது ஐஸ்வர்யங்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிலையில் நவராத்திரி திருவிழா 10 -ம் நாள் லட்சார்ச்சனை நிறைவு நாள் திருவிழா தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றன. முன்னதாக அபிராமி அம்மனுக்கு பால். பன்னீர், இளநீர், சந்தனம், நெய். தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிராமி அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றன. அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.