சூலூர் காரண கரிவரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2024 11:10
சூலூர்; வெங்கிட்டாபுரம் ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.
சூலூர் அடுத்த வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. இங்கு திருக்கல்யாண உற்சவ விழா மூலவர், உற்சவர் திருமஞ்சனத்துடன் துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, பாசுரப்படி திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த பெருமாளுக்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதன்பின், ஸ்ரீ காரண ராஜர் உபய நாச்சியார்களுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. நேற்று முன் தினம் திருவோண வைபவம் மற்றும் புறப்பாடு நடந்தது. இரவு திருக்கவளம் மற்றும் கருட வாகன புறப்பாடு நடந்தது. நேற்று வேடுபறி வைபவம் நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.