வெங்கடேச பெருமாள் கல்யாண உற்சவ தேங்காய்; ரூ.7 ஆயிரத்திற்கு ஏலம் போனது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2024 11:10
நெட்டப்பாக்கம்; மடுகரை வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரையில் பத்மாவதி தாயார் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக காப்பு கட்டுதல், பூணூல் போடுதல், யாககுண்டம் வளர்த்தல் ஆகியன நடந்தது. பின் யாகம் வளர்க்கப்பட்டு வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் மங்கள் வாத்தியம் முழங்க திருமண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மாற்றுதல், பூப்பந்து போடுதல், தேங்காய் உருட்டுதல் ஆகியவை நடந்தது. இதில் மடுகரை மற்றும் சுற்று பகுதி கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து உருட்டப்பட்ட 2 தேங்காய்கள் 7 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. தேங்காய் ஏலம் எடுப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.