ஆண்கள் மட்டும் பங்கேற்ற கருப்பணசுவாமி கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2024 11:10
வத்தலக்குண்டு; தருமத்துப்பட்டி கோட்டை கருப்பணசுவாமி கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஒருநாள் இரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இத்திருவிழாவில் நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு விடிய விடிய கறி விருந்து நடந்தது. கோயில் முதன்மைகாரர்கள் கோட்டை கருப்பணசுவாமிக்கு பொங்கல் படைத்தனர். வாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கப்பட்டு, கோயிலுக்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட நுாற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. அதன்பின் பச்சரிசியில் சோறு சமைத்து உருண்டையாக பிரசாதம் தயார் செய்யப்பட்டது. பலியிடப்பட்ட ஆடுகள் சமைக்கப்பட்டு பச்சரிசி சோறு உருண்டையுடன் கறி விருந்து பரிமாறப்பட்டது. மழையை பொருட்படுத்தாமல் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த கறி விருந்தில் விருவீடு, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.