குருவாயூர் கிருஷ்ணருக்கு காணிக்கையாக 25 சவரன் தங்க கிரீடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 11:10
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணருக்கு காணிக்கையாக தங்க கிரீடம் தயாரித்துள்ளனர்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இக்கோவில் மூலவருக்கு காணிக்கையாக துபாயில் தயாரித்த 25 சவரன் எடை கொண்ட தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர் துபாயில் பணிபுரியும் கேரள மாநிலம் சங்கனாசேரி கோட்டமுறி பகுதியைச் சேர்ந்த ரதீஷ் மோகன். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை கோவில் நிர்வாக குழு உறுப்பினர் பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு ஏற்று வாங்கினர். கோவில் துணை நிர்வாகி பிரமோத், உதவி மேலாளர் பிரசாந்த், காணிக்கை சமர்ப்பித்த ரதீஷ் மோகனின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர் கடந்தாண்டு அக்டோபரில் தங்க புல்லாங்குழல் கிருஷ்ணருக்கு காணிக்கையாக சமர்ப்பித்து இருந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட உள்ள பலர் தங்க கிரீடம் காணிக்கையாக கிருஷ்ணருக்கு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.