Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கராபுரம் சவுந்தர்ராஜ பெருமாள் ... கடந்த ஆண்டில் சேதமடைந்த கோயில் சுற்றுச்சுவரை சீரமைக்காமல் அலட்சியம் கடந்த ஆண்டில் சேதமடைந்த கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொக்கநாதர் கோவிலில் பள்ளம் தோண்டிய போது சுரங்க அறை கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை ஆய்வு
எழுத்தின் அளவு:
சொக்கநாதர் கோவிலில் பள்ளம் தோண்டிய போது சுரங்க அறை கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை ஆய்வு

பதிவு செய்த நாள்

22 அக்
2024
05:10

நடுவீரப்பட்டு; பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க அறையை தொல்லியல் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.


கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான சொக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடந்து வருகிறது. இப்பணியின்போது, சுப்ரமணியர் சன்னதியில் உள்ள அர்த்தமண்டபத்தில் தரைக்கு கருங்கற்கள் பதிக்கும் பணி கடந்த 20ம் தேதி துவங்கியது. இதற்கு பள்ளம் தோண்டியபோது, சுரங்க அறை காணப்பட்டது. 


இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலை கடலுார் அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் பரணிதரன் உத்திரவின் பேரில், கடலுார் மண்டல ஸ்தபதி சக்திவேல், தொல்லியல் துறை ஆலோசகர் இளஞ்செழியன் ஆகியோர் கோவிலில் சுரங்க அறையை ஆய்வு செய்தனர். ஆய்வில், சுரங்க அறை 5 அடி உயரம், 11 அடி நீளம், 6 அடி அகலம் உள்ளதாக இருந்தது. இந்த அறை முழுவதும் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளது. எந்த பொருளும் அங்கு இல்லை. அதை தொடர்ந்து, சுரங்க அறையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டு சென்றனர். 


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் ‘கடந்த காலங்களில் சாமி சிலைகளை பாதுகாக்க இதுபோன்ற அறைகள் அமைக்கப்படுவது வழக்கம். பல கோவில்களில் ரகசிய அறைகள் இருந்து வருகிறது. அதுபோல் இந்த கோவிலிலும் சிலைகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருக்கலாம்’ என, தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar