Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கநாதர் கோவிலில் பள்ளம் ... முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு முருகன் கோவிலுக்குள் பாம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடந்த ஆண்டில் சேதமடைந்த கோயில் சுற்றுச்சுவரை சீரமைக்காமல் அலட்சியம்
எழுத்தின் அளவு:
கடந்த ஆண்டில் சேதமடைந்த கோயில் சுற்றுச்சுவரை சீரமைக்காமல் அலட்சியம்

பதிவு செய்த நாள்

22 அக்
2024
05:10

தொண்டி; தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில் சுற்றுச்சுவர் கடந்த ஆண்டு பெய்த பருவமழையில் சேதமடைந்தது. 11 மாதங்கள் ஆகியும் சீரமைக்காமல் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.      தொண்டியில் மன்னர்கள் காலத்தில் கட்டபட்ட பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம். இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிேஷசன், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயில் சுற்றுச்சுவர் செங்கல், மண்ணால் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.4ல் பலத்த மழைக்கு கோயில் வடக்கு பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். 11 மாதங்கள் ஆகியும் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


பக்தர்கள் கூறுகையில், கோயிலுக்கு நிலம் மற்றும் கடை வாடகையாக ரூ.20 லட்சத்திற்கும் மேல்  வருமானம் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இடிந்து விழுந்த சுவரைக்கூட சீரமைக்கவில்லை. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் அந்த சுவர் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஹிந்து கோயில்களில் இருந்து வருமானத்தை மட்டும் ஹிந்து அறநிலையத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கோயிலை பராமரிக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. கோயிலின் தென் பகுதியிலும் விரிசல் உள்ளது. கோயில் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே ஹிந்து சமய அறநிலையத்துறையினர் உடனடியாக கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar