Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை தரும் மாரியம்மன் கோயிலில் உலக ... 750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு 750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் அவதாரத் திருநாள்; திருக்கடையூரில் சிறப்பு ஹோமம், கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் அவதாரத் திருநாள்; திருக்கடையூரில் சிறப்பு ஹோமம், கலசாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 அக்
2024
11:10

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தில் அவதார திருநாள் மற்றும் மணிவிழா ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.


மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் திருமடம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். குருமகா சன்னிதானத்தில்அவதாரத் திருநாள் மற்றும் மணிவிழா ஆண்டு துவக்கம் புனர்பூசம் நட்சத்திர தினமான இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அதிகாலை திருமடத்தில் சொக்கநாதர் பூஜை செய்தார்தொடர்ந்து மணிவிழாவை முன்னிட்டு ஆண்டு முழுவதும் தினமும் ஒரு நூல் வீதம் 365 நூல்கள் வெளியிடப்பட உள்ளது. 


அதன் ஒரு பகுதியாக  திருவாலவாயுடையார் பயகர மாலை என்னும் நூலை குருமகா சன்னிதானம் வெளியிட்டார். தொடர்ந்து அவர் 25வது குருமகா சன்னிதானத்தின் குருபூஜை வழிபாடு செய்த பின்னர் குரு மூர்த்தங்களில் குருவார வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்த குரு மகா சன்னிதானத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். இவனை எடுத்து கோவில் சங்கு மண்டபத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் உக்ரரத சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டு கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு மகா சன்னிதானத்திற்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றி கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து குரு மகா சன்னிதானம்  விநாயகர்  அமிர்தகடேஸ்வரர் கால சம்ஹார மூர்த்தி  முருகப்பெருமான் மற்றும் அபிராமி அம்பாள்  சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து திருமடத்திற்கு திரும்பிய தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஆதீன கோவில்களின் பிரசாதம் பார்த்த பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குரு மகா சன்னிதானம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் இன்று புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மாலை திருமடத்தில் வேத ஆகம சிந்தனைகள் மற்றும் திருமுறை சிந்தனைகள் எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. எனவேசியில் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்தின் தந்தை மறைஞான சம்பந்தர், சகோதரர்கள் வெற்றிவேல், விருதகிரி, கார்த்திகேயன் மற்றும் ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஆதின பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சீர்காழி கோவில் கண்காணிப்பாளர் செந்தில், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar