Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்கராஜபுரம் பகுதியில் கிராம தேவதை ... ஐப்பசி வெள்ளி; மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் ஐப்பசி வெள்ளி; மாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள்; பக்தர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள்; பக்தர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

25 அக்
2024
11:10

கோவை, மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இந்த இரண்டு கோவில்களும் வனப் பகுதிக்குள் அமைந்து உள்ளது.


கோவையில் கடந்த சில மாதங்களாக மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் படிக்கட்டுகளில் செல்லும் பாதையில் காட்டு யானை முகாமிட்டு, கடந்து சென்றது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதே போல் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடைபாதையிலும் அடிக்கடி யானைகள் உலா வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக கோவிலுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் காலை நடை பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் மருதமலை கோவிலில் உள்ள முன்வாயில் கேட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூடவும், மேலும் அருகில் உள்ள நடை பாதையை முற்றிலுமாக மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் நேர கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்குமாறும், இது குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்து கண்காணிப்பாள்களை நியமிக்குமாறு கோவில் நிர்வாகத்தை வனத்துறை அறிவுறுத்தினர். தவறும் பட்சத்தில் மனித - யானை மோதல் ஏதேனும் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேடி உலா வரும் யானைகளை வனத்துறை மற்றும் விவசாயிகள் விரட்டுவதால் எங்கு செல்வது என்று தெரியாமல் இன்று காலை பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பாதையில்  வாலை சுருட்டிக் கொண்டு ஆக்ரோஷமாக யானை உலா வந்து கொண்டு உள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடனும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar