ஐப்பசி வெள்ளி; மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2024 11:10
கோவை; கோவை என். எச். ரோடு - டவுன்ஹால் ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் ஐப்பசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.