Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை வீரட்டானேஸ்வரர் ... திருச்செந்துார் கந்த சஷ்டி விழா: கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வழக்கு திருச்செந்துார் கந்த சஷ்டி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொண்டி பெருமாள் கோயிலில் சுற்றுச்சுவரை சீரமைக்க முடிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தொண்டி பெருமாள் கோயிலில் சுற்றுச்சுவரை சீரமைக்க முடிவு

பதிவு செய்த நாள்

25 அக்
2024
12:10

தொண்டி; தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் சேதமடைந்த சுற்றுச்சுவரை தினமலர் நாளிதழ்செய்தி எதிரொலியாக சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில் சீரமைக்கப்படும் என்றனர்.


தொண்டியில் மன்னர்கள்காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம். இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிசேஷன், ராமானுஜர்சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். இக்கோயில் சுற்றுச்சுவர்செங்கல், மண்ணால் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.4ல் பலத்த மழையின் போது கோயில் வடக்கு பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதன் பின் 11 மாதங்கள் ஆகியும்சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்தர்கள் கூறுகையில், இக்கோயிலுக்கு நிலம், கடை வாடகை மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்கவில்லை. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் அந்த சுவர் மேலும் இடிந்து விழும்நிலையில் உள்ளது.ஹிந்து கோயில்களில்இருந்து வருவாயை மட்டும் ஹிந்து அறநிலையத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கோயிலை பராமரிக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை என்றனர். 


இதுகுறித்து நேற்று முன்தினம் தினமலர்நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ராமநாதபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி பொறியாளர் சங்கிலி, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். அவர்கள் கூறுகையில், சுவர் இடிந்து விழுந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டது. சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்படும். அனுமதி வழங்கியவுடன் விரைவில்பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar