Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனாதன தர்மத்திலும் கடவுள் ஒருவரே: ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி தேய்பிறை பிரதோஷ பூஜை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி அருளாசி வழங்கிய ஆன்மிக சான்றோர்கள்; இருளை நீக்க இன்பமாகிய ஒளியை ஏற்றுங்க...
எழுத்தின் அளவு:
தீபாவளி அருளாசி வழங்கிய ஆன்மிக சான்றோர்கள்; இருளை நீக்க இன்பமாகிய ஒளியை ஏற்றுங்க...

பதிவு செய்த நாள்

30 அக்
2024
07:10

‘அஞ்ஞானத்தை விலக்கி, அறிவாகிய சுடர் ஒளியாக சுடர்விடும் நாளாகிய (நாளை) தீபாவளி பண்டிகையை தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்,’ என, ஆன்மிக சான்றோர் அருளாசி வழங்கியுள்ளனர்.


ஒவ்வொரு நபரின் வாழ்விலும், தீபாவளி பண்டிகை என்பது, மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது. ஆண்டு முழுவதும் தங்களது கடமைகளை நிறைவேற்ற உழைக்கிறோம். ஆண்டில் ஒரு நாள் மட்டும் தான், இந்தியா முழுவதும், தீபாவளி என்ற பெயரில், இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி இன்பமாக ஒளியை நல்கும் நாளாகிய தீபாவளியே, சிறப்பான பண்டிகை என, பிற மதத்தை சார்ந்தவர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். அவ்வகையில், நாளை வரும் தீபாவளி என்பது, அஞ்ஞானத்தை விலக்கி அறிவுச்சுடராகிய பிரகாசத்தை அருளும் நன்னாளாக இருக்குமென, ஆன்மிக சான்றோர் அருளாசி கூறியுள்ளனர்.


அஞ்ஞானம் விலகட்டும்; ஆன்மிகம் தழைக்கட்டும்.. உலகில் அன்பும், சகோதரத்துவம், மனிதாபிமானம், ஒற்றுமை, வளர்ச்சி ஓங்கவும், அமைதியும், ஸ்திரத்துடன் கூடிய செயல்கள் முன்னேறவும், இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன். தீபாவளி நாளில் அதிக அகல் விளக்குகளை ஏற்றி வைப்பதால், தீப வெளி என்பது, தீபாவளி என்கிறோம். நம்முள் இருக்கும் இருள் எனும் அஞ்ஞானத்தை விலக்கி, அறிவாகிய சுடரை ஒளிரவிடும் நாளாகும். பூமித்தாயின் புதல்வனாம் நரகாசுரனை அழித்தநாள் என்பதால், அரக்கத்தனத்தை நீக்கி மாசில்லா பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும். பூமியையும், பஞ்ச பூதங்களும், துாய்மையாக வைத்து, தீபாவளியை கொண்டாட வேண்டும். – காமாட்சிதாச சுவாமி


திருப்புக்கொளியூராதீனம்


வாசீகர் மடாலயம், அவிநாசி.


மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!; அனைவருக்கும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்; மக்கள், மகிழ்ச்சிகரமாக கொண்டாட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு குழப்பம், கவலைகள் இருந்தாலும், ‘இன்பமும், துன்பமும் இல்லானே உள்ளானே’ என்று மாணிக்கவாசகர் கூறியதுபோல், இன்பமும், துன்பமும் மாறிமாறி வருகின்றன. இரண்டும் கலந்து வருவதே, மனித வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும். ஒன்றுகூடி மகிழ்வுடன் கொண்டாடவே, பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. குழப்பமும், வியாதிகளும் அறவே நீங்க, ஆத்மார்த்தமாக கண்ணீர்விட்டு கதறி, இறைவனின் திருவடியை பிடித்து வழிபட வேண்டும். இறைவன் அனைவரையும் குறையின்றி காப்பான். தீமையை அழித்து, நன்மையை வரவேற்க தீபாவளியை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்! – நடராஜ சுவாமி


முதல்வர், ஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை, முதல்வர், கூனம்பட்டி திருடம்.


நமக்குள் இருக்கும் நரகாசுரனை அழிப்போம்!; உலக மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி எனும் மகிழ்ச்சிக்குரிய நாள், மக்கள் மனநிறைவு கொள்ளும் பெருநாள். தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் கொடுத்த நரகாசுரனை அழித்த நாள் என்பதால், தீபாவளி என்பது தீமையை அழித்து மகிழ்ச்சியை கொண்டாடும் நாள். தீபாவளி பண்டிகை குறித்து பல்வேறு நம்பிக்கைக்குரிய வரலாறு உண்டு. இருப்பினும், கதைகளாக சொல்லிக் கொண்டிருக்காமல், நமக்குள் இருக்கும் கொலை, களவு, பஞ்சபாதகம், பொய், தீண்டாமை, புலால் உண்ணுதல், மது அருந்துதல், உழைக்காமல் உண்பது, கணவனை அவமதிப்பது, மனைவியை கொடுமை செய்வது, பெற்றோர் சொல் மீறுதல், அதிக உறக்கம் உள்ளிட்ட இன்னும் பல மனித வளர்ச்சிக்கு தீங்கு செய்யும் நரகாசுரன்களை அழித்து, தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அதிகாலை எழுந்து, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பிறருக்கு மனிதநேயத்தை காட்டி, நம்மிடம் இருக்கும் இருளை நீக்கி, ஒளி ஏற்றி, மன நிறைவுடன் வாழ இறைவனை வேண்டுவோம். உறவுகளோடு உறவாடி மகிழ்ச்சி பொங்கும் நாளாக இந்த தீபாவளி அமையட்டும்.


– பஞ்சலிங்கேஸ்வரர். கோவை காமாட்சிபுரி ஆதீனம்


நன்மையை வரவேற்று நல்லதை போற்றுவோம்!


தீபாவளி திருநாளானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பபடும் மிகச்சிறப்பான திருவிழா. தீபாவளி திருநாளில், தீபங்களை ஏற்றி வைத்து, வடமாநிலங்களில் கொண்டாடுகின்றனர். நரகாசுரனை அழித்த நாள் என்று கதை கூறினாலும், விலகி, நன்மை பெருக வேண்டும் என பட்டாசு வெடித்து, தீயவற்றை அழித்து கொண்டாடுகிறோம். சீக்கியர், சமனர், புத்தமார்களும், இந்நாளை கொண்டாடுகின்றனர். பண்டிகையின் நோக்கமே, தீமையை அழித்து நன்மையை வரவேற்பதுதான்; நாமும் நல்லதை வரவேற்போம். – சுந்தரராஜ சுவாமி, ருமுருகநாத சுவாமி திருமடம் திருமுருகன்பூண்டி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar