குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2024 10:11
பெரியபட்டினம்; பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்குட்பட்ட குச்சிலிய மடத்து மகாமுனீஸ்வரர் கோயிலில் கடந்த செப்., 15 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தின் அருகே புதிதாக கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் நிறைவை முன்னிட்டு மூலவர்கள் விநாயகர், காளியம்மன், மகாமுனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாரனை நடந்தது. முன்னதாக ஆலமரத்தின் அருகே உள்ள பீடத்தில் மூலவர்கள் நாகநாதர், ராகு, கேது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டன. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.