Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் கந்தசஷ்டி விழா; ... குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி பழநி ஆண்டவர் முருகன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
காஞ்சி பழநி ஆண்டவர் முருகன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

04 நவ
2024
10:11

காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழநி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலில். 15ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா, கடந்த 1ம் தேதி துவங்கியது. அன்று மாலை விநாயகர் வீதியுலா நடந்தது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் வீதியுலாவும், தொடர்ந்து தாருகாசூரன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை மூலவர் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், காலை 9:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, பம்பை, தவில், நாதஸ்வரம் வாத்தியங்கள் இசைக்க, முருக பக்தர் சுரேஷ், தனது உடலில், 108 வேல் தரித்து முன்னே சென்றார். பெண்கள் 108 பால்குடம் ஏந்தியபடி, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக பழநி ஆண்டவர் கோவில் சென்றனர். தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை முருகப்பெருமான் வீதியுலாவும், சிங்கமுகா சூரன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது. நான்காம் நாள் உற்சவமான இன்று காலை 11:00 மணிக்கு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், மாலை முருகப்பெருமான் வீதியுலாவும், அக்னி முகன் வதம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் விமரிசையாக நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar