பதிவு செய்த நாள்
05
நவ
2024
11:11
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா கடந்த, 1ம் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞாஷ்டகம், வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.விழாவையொட்டி தினமும், நான்கு கால அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நாளை (6ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு வேல்வாங்கும் உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 7ம் தேதி மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹாரமும்; 8ம் தேதி காலை, 10:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது. வரும், 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், கணபதி ேஹாமம், அபிேஷகம், தீபாராதனை நடந்தது. நாளை (6ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு மாரியம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 7ல் மாலை, 4:00 மணிக்கு ஊர் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு மஹா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.வரும், 8ல் காலை, 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. அங்கலகுறிச்சி செல்வமுருகன் கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வரும், 7ம் தேதி மாலை, 6:00 மணிக்கு செல்வ முருகர் சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை, 6:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து இரவு, 8:30 மணிக்கு பால் அபிேஷகம், தீபாராதனையும்; வரும், 8ம் தேதி காலை, 6:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது. அதன்பின், விக்னேஸ்வர பூஜை, திருக்கல்யாண உற்வசம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.