திருக்கோவிலூர்; கனகனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விஜய விநாயகர் கோவில் ஆண்டு விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் ,அரச மரத்தடியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த விஜய விநாயகர் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காலை 7:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில், அர்ச்சனை, மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.