ஐப்பசி செவ்வாய், கந்த சஷ்டியின் நான்காம் நாள்; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2024 12:11
கோவை; ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை மற்றும் கந்த சஷ்டியின் நான்காம் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேதராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.