பதிவு செய்த நாள்
05
நவ
2024
03:11
ராணிப்பேட்டை; ரத்தனகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு 4-வது நாளில் விலை மதிப்பிலான வைரங்கி அலங்காரம் செய்யப்பட்டு உச்சி கால பூஜையில் திரளான பக்தர்கள் கருவறை முழுவதும் சூழ்ந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை சுவாமிக்கு கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து நான்காவது நாளான இன்று கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், விபூதி, மஞ்சள், அரசி மாவு, பஞ்சாமிர்தம், சொர்ணம் மற்றும் கலச அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேத பண்டிதர்கள் உச்சி கால பூஜையில் முருகப்பெருமானுக்கு வைரங்கி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை ரத்தினகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டுச் சென்றனர்.