Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் வீதியுலா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கசவனம்பட்டியில் குருபூஜை விழா; குவிந்த வெளிமாநில சாதுக்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கசவனம்பட்டியில் குருபூஜை விழா; குவிந்த வெளிமாநில சாதுக்கள்

பதிவு செய்த நாள்

05 நவ
2024
04:11

கன்னிவாடி; கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை விழாவில், ஏராளமான வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றனர்.


கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டிற்கான விழா, குரு பூஜை இன்று நடந்தது. முன்னதாக காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள், சிவனூரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி,‌ காசி, சதுரகிரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தீர்த்த, பால் கலச ஊர் விளையாடல் நடந்தது. நவ. 4ல் தீர்த்தாபிஷேகத்துடன் விழா துவங்கியது. இன்று (5ம் தேதி) அதிகாலை உலக நன்மைக்காக மகா யாகம் நடத்தப்பட்டது. ஆயிரத்து 8 படி பாலாபிஷேகம், திரவிய அபிஷேகத்துடன் பழங்கள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவார பாராயணம், திருவாசக முற்றோதலுடன் குருபூஜை நடந்தது. அன்னதான கொடி ஏற்றப்பட்டு, தொடர் அன்னதானம் நடந்தது. சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடந்தது. மும்பை, காசி, பத்ரிநாத் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் அரசு துணை செயலாளர் பேச்சியம்மாள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar