பதிவு செய்த நாள்
06
நவ
2024
10:11
திருத்தணி; ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து ஐந்தாம் நாளில், நாகசதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது.
திருத்தணியில் கங்கையம்மன், நல்லதண்ணீர் குளக்கரை நாகவள்ளி, தணிகாசலம்மன், படவேட்டம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி ஒட்டிதிரளான பெண்கள்புற்றில் முட்டை,பால் ஊற்றி பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர். ராமகிருஷ்ணாபுரம் தேசம்மன், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் ஆகிய கோவில்களில் நடந்த நாகசதுர்த்தி விழாவில் பெண்கள் சிறப்பு பூஜை செய்துவழிப்பட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், நாகவல்லி அம்மன் கோவிலில், மூலவர்அம்மனுக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பெரியபாளையம் பவானியம்மன்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் புற்றுக்கு பால், முட்டை வழங்கி வழிபட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் பெரிய குளக்கரையில் உள்ள நாகாலம்மன் கோவிலில் காலை 10:00 மணிக்குசிறப்பு அலங்காரம், அபிஷேகம்நடந்தது. திரளான பெண்கள், நாகாலம்மனுக்கு பால்,பழம் உள்ளிட்டவற்றை படைத்துவழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு நாகாலம்மன் உற்சவர், வீதியுலா வந்தார். அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும்நாகசதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.