பதிவு செய்த நாள்
06
நவ
2024
10:11
குன்றத்துார்; குன்றத்துார் மலையில் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2ம் தேதி, கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா துவங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா, நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, சிறப்பு பேருந்து, மருத்துவ குழு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முருகர் சூரனை வதம் செய்யும் சூரர் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, தாயார்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன், அறங்காவலர்கள் சரவணன், ஞானசேகர், சங்கீதா, ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.