திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்; சூரனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2024 10:11
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கந்த சஷ்டி விழாவையொட்டி திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கடந்த நவ. 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்கோலம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருக்காட்சி அங்குள்ள கிரிவல பாதையில் நேற்று மாலை நடந்தது. இதில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.