பதிவு செய்த நாள்
26
நவ
2012
10:11
நகரி :திருப்பதி, திருமலை கோவிலில், வெங்கடேச பெருமாளை, சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில், கவுசிக துவாதசி தினத்தை ஒட்டி, நேற்று அதிகாலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை, உக்கிர சீனிவாசமூர்த்தி உற்சவராக எழுந்தருளி, மாட வீதியில் குவிந்திருந்த, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சூரிய உதயத்திற்கு முன், இந்த உற்சவம் நடத்தப்பட்டது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில், செயல்பட்டு வரும் நாராயணவனம் கிராமத்தில் அமைந்துள்ள, கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில், தெப்ப உற்சவத்தின் தொடக்க நாளான, நேற்று முன்தினம், தெப்ப திருக்குளத்தில், சீதா லட்சுமண சமேத ராமச்சந்திர மூர்த்தி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.