பதிவு செய்த நாள்
12
நவ
2024
10:11
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பெரிய மலையின் தென்மேற்கில் அமைந்துள்ளது சிந்தாமணீஸ்வரர் கோவில்.
மலை குன்றுகளுக்கு இடையே, பள்ளத்தில் அருள்பாலிக்கும் சுவாமிக்கு பக்தர்கள் அபிஷே கம், அங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலுக்கு சீரான பாதை வசதி கிடையாது. இதானல், கற்களை கொண்டு, பாதை அமைக்கும் முயற்சியில் சிவனடியார்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பாதையை ஒட்டி மரக்கன்றுகளும் நட்டு பராமரித்து வருகின்றனர். இயற்கான பாறைகளுக்கு இடையே குகை போன்ற அமைப்பே கோவிலாக அமைந்துள்ளது. பாதையும், மண், கல் கொண்டு அடுக்கப்பட்டு வருகிறது. சோளிங்கர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சிவனடியார்கள் இந்த கோவிலில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் 20க்கும் மேற்பட்டோர் இந்த கோவிலில் படிகள் அமைக்கும் பணி மற்றும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடத்தினர். சிந்தாமணீஸ்வருக்கு எதிரே குன்று ஒன்று நந்தீகேஸ்வரராக வீற்றிருப்பதும் இந்த தலத்தின் சிறப்பு.