பதிவு செய்த நாள்
12
நவ
2024
11:11
நாகர்கோயில்; மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கி நேற்று வரை 10 நாள் நடந்தது. இந்த விழாவின் ஆறா வது நாளன்று முக்கிய நிகழ்வாக கடந்த வியாழ கிழமை முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் மருங்கூரில் நடந்தது. சூரனை வதம் செய்து கடுமையான உக்கிரத்திலிருக்கும் இருக்கும் முருகனை ஆற்றுப்படுத் தும் (சாந்தப்படுத்தும்) விதமாக மயிலாடியில் நேற்று மாலை ஆராட்டு விழா நடந்தது.
குதிரை வாகனம்: இதற்காக வெள்ளி குதிரை வாகனத்தில் மருங்கூரில் இருந்து முருகப்பெருமான் ஊர்வலமாக வந்தார். செண்டை மேளம் முழங்க சுவாமிக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து, தேங்காய், பழம், பன்னீர், மாலை உள்ளிட்ட பொருட்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மயிலாடி வந்தடைந் ததும் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தீர்த்தவாரி ஆராட்டு மடத்தில் சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று ஆராட்டு நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர், தேன், உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்களும், சிறப்பு அலங்கார தீபா ராதனையும் நடந்தன. தொடர்ந்து அலங் கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ஆராட்டு மடத்திலிருந்து புறப்பட்டு மயிலாடிபுதூர், மயிலாடி சந்திப்பு, சேந்தன்புதூர், குமாரபுரம், தோப்பூர் வழியாக மருங்கூர் கோவிலுக்கு சென்றடைந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.