கொல்லப்பட்டி மலை சுயம்பு பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2024 04:11
வடமதுரை; வடமதுரை கொல்லப்பட்டி பெருமாள்மலையில் சுயம்பு பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இம்மலை உச்சியில் அமைந்திருக்கும் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு முன்பு முறையான பாதை வசதியில்லாமல் ஒற்றையடி பாதையை பயன்படுத்தி மலையேறி பக்தர்கள் வழிபட்டனர். தற்போது கொல்லப்பட்டி, ஜி.புதுார், எம்.வி.நாயக்கனுார் கிராம மக்கள் ஒருங்கிணைந்து மலை உச்சி வரை கார்,வேன், டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைத்துள்ளனர். கோயில் திருப்பணியில் கூடுதலாக முன்மண்டபமும் கட்டினர். நவ.11ல் மஹா சுதர்சன ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கி, 5 கால யாக பூஜைஜைகளை தொடர்ந்து இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. துாங்கணம்பட்டி வெங்கடேசப் பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டினை கொல்லப்பட்டி, ஜி.புதுார், எம்.வி.நாயக்கனுார் கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.