Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமி பூஜை : சிவன் கோயில்களில் ... திருக்கோவிலூர் ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் திருக்கோவிலூர் ஏகாம்பரேஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

16 நவ
2024
07:11

திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி ஒட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, 200 கிலோ பச்சரிசி சமையல் மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அன்னபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருத்தணி அடுத்த தாடூர் கடலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், ஒரு மூட்டை அரிசியால் சாதம் தயாரித்து மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தி வழிப்பட்டனர். திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், திருக்குளம்சரவண பொய்கை அருகே உள்ள சிவன் கோவில், பழைய திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர், மத்துார், அகூர் மற்றும் அருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. பேரம்பாக்கம் சோளீஸ்வரர், திருப்பாச்சூர் வாசீஸ்வரர், மணவாளநகர் மங்களீஸ்வரர், வெங்கத்துார் ஸ்ரீவேதகிரீஸ்வரி சமேத ஸ்ரீவேதகிரீஸ்வரர், மப்பேடுசிங்கீஸ்வரர் சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் மூலவருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனையும் நடந்தது. கூவம் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் அன்னாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar