பதிவு செய்த நாள்
16
நவ
2024
08:11
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் நிர்மாணிக்கப்பட்டது. அங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம், பவுர்ணமி அன்னாபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல், கோவில் வளாகம், பக்தர்களால் வழங்கப்பட்ட பல டன் எடை உடைய காய்கறிகள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டன. நேற்று, மூலவர் ரத்னகிரீஸ்வரர் சுத்த அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டார். அவருக்கு மஹா தீபாராதனை நடந்தது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, 4.5 டன் காய்கறிகள், 2 டன் பழங்கள், அரிசி மூட்டைகள் அனைத்தும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகின்றன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், அன்னாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. ஐப்பசி பவுர்ணமி, திதி கணக்குப்படி, வடபழனி ஆண்டவர் உள்ளிட்ட சில கோவில்களில் நேற்று முன்தினம், அன்னாபிஷேகம் நடந்தது. –- நமது நிருபர் -–