பதிவு செய்த நாள்
16
நவ
2024
08:11
திருப்பதி: திருமலையில், கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்றிரவு, 7:00 முதல், 9:00 மணி வரை, மலையப்பஸ்வாமி கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமி இரவு வேளைகளில் கருடசேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. வருடாந்திர பிரம்மோற்ஸவத்தின் போது நடத்தப்படும் கருட சேவையை காண முடியாத பக்தர்கள் இதை கண்டு தரிசித்து வருகின்றனர். பவுர்ணமி கருட சேவை நேற்று இரவு 7 மணிக்கு சர்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் டிடிடி தலைவர் பி.ஆர்.நாயுடு, ஆதிசேஷன், இவோ சி.எச்.வெங்கய்ய சௌதரி, திருப்பூர் எஸ்பி சுப்பராயுடு, கோயில் துணை ஈவோ லோகநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.