திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆகாய லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2024 08:11
திருவெற்றியூர் ; ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு திருவெற்றியூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையான 16 கலைகளுடன் பூரண வலிமையுடன் விளங்குகிறார். இந்நாளில் அறுவடையான புதுநெல்லைக் கொண்டு இறைவனுக்கு அமுதுபடைக்கும் விழா அன்னாபிஷேகமாகும் எனப்படுகிறது. இதனை முன்னிட்டு பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆகாசலிங்கேஸ்வரருக்கு 108 கிலோ அரிசி கொண்டு உணவு சமைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. காய்கறி, பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அன்னத்தை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து வடிவுடையம்மன் சன்னதியில் பவுர்ணமியை முன்னிட்டு பெண் பக்தர்கள் 108 விளக்குகள் ஏற்றி அம்மன் பாடல்கள் பாடி வழிபட்டனர்.