உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2024 11:11
உடுமலை : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு இன்று உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்கு பூஜை நடந்தது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை திங்கட்கிழமை சோமவார 108 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 9.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, ஹோமம், காலை 10.30 மணிக்கு அபிஷேக பூஜைகள், காலை 11.00 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.