பதிவு செய்த நாள்
18
நவ
2024
12:11
பல்லடம்; பல்லடம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
பல்லடம் கடைவீதியில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பொங்காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த இக்கோவில், அறநிலையத்துறை அனுமதி பெற்று, பக்தர்களின் பங்களிப்புடன் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஐந்து மாதங்களாக திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் டிச., மாதம் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக, பொங்காளி அம்மனுக்கு தாலி வாங்கப்பட்டு, கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் பணி, அக்., 21 அன்று நடந்தது. இதையடுத்து, யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்துக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அதற்குள் திருப்பணிகளை முடித்தாக வேண்டும் என்பதால், பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.