கீழக்கரை சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2024 10:11
கீழக்கரை; கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நேற்று கார்த்திகை முதல் திங்கள் கிழமை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை நடந்தது. நந்தி பகவான் திருவுருவம் வரையப்பட்டு அவற்றின் மீது நெல்மணிகள் கொட்டப்பட்டு சங்குகளால் வரிசையாக சுற்றிலும் சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட்டன. மூலவர் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பஜனை, நாமாவளி, ருத்ர நாமஜெபம் உள்ளிட்டவைகளை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ஹரிஹர சர்மா செய்திருந்தார். உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது.