பதிவு செய்த நாள்
20
நவ
2024
01:11
கூடலூர்; மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழித்துணை விநாயகர், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
மேல்கூடலூர், அருள்மிகு சந்தக்கடை மாரியம்மன் கோவில் வளாகத்தில், புதிதாக வழித்துணை விநாயகர், ஐயப்பன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக திருவிழா நேற்று துவங்கியது. மாலை 5:00 மணிக்கு ஸ்ரீவிநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி சக்ஷா பந்தனம், முதல் கால யாகபூஜை, கோபுரம் கலசம் வைத்தல், திரவ்ய யாகம், பூர்ணாகுதி, ஸ்ரீ விநாயகர் மற்றும்ஸ்ரீ ஐயப்பன் யந்திர ஸ்தாபனம் பிரதிஷ்டை செய்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகபூஜை, ஸ்பரிசாகுதி, திரவ்ய யாகம், மகா பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடந்தது, தொடர்ந்து, 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து, கலச நீர் கோபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து, வழித்துணை விநாயகர், ஐயப்பன் கோவில்களில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.