Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை சந்தான வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 நவ
2024
02:11

விழுப்புரம்; மரக்காணத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த நூறு ஆண்டுக்கு மேலாக மறுசீரமைப்பு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கோயிலை மறு சீரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் சிறப்பு ஆராதனைகள் மற்றும் கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, பொது மக்களின் "ஓம் நமச்சிவாய"  கோஷங்களுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.காரமடையில் ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் - சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பூர், அவிநாசி அடுத்த சேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, தெய்வானை யானை தாக்கியதில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar