முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா; நவ.26ல் பொங்கல் படையல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2024 10:11
பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடக்கிறது. முத்தால பரமேஸ்வரிஅம்மன் கோயிலில் பங்குனி மாத தேரோட்ட விழா, பால்குடம் விழா கொடி ஏற்றத்துடன் மிகவும் விமரிசையாக நடக்கும். அந்த வகையில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்தும், கரும்புத்தொட்டி, முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக் கடன் நிறைவேற்றுவர். தொடர்ந்து ஆண்டில் 8 நாட்கள் அம்மன் தானே காப்பு கட்டி கொள்வதாக ஐதீகம் உள்ளது. இதன்படி செவ்வாய் சாட்டு விழா நவ.19ல் துவங்கி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், கணக்கர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என விழாக்களை நடத்துகின்றனர். நவ.26 வரை உள்ள 8 நாட்களில் பக்தர்கள் நேர்த்தி கடன், பிரார்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளனர். விழாவின் நிறைவு நாளான நவ.26ல் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு அன்னதானம் நடக்கிறது.