உலக நன்மை வேண்டி 300 நாள் நடத்தப்பட்ட ரிக்வேத பாராயணம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2024 10:11
சென்னை: அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு காஞ்சி காமகோடி பீடம் வாயிலாக 300 நாட்கள் நடத்தப்பட்ட ரிக்வேத பாராயணம் நிறைவு பெற்றது.
ராமஜென்ம பூமியான அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22ல் நடந்தது. இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் காஞ்சி காமகோடி பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கட்டளைப்படி கோதண்டபாணிக்கு தண்ட சமர்ப்பணம் என்ற பெயரில் உலக நன்மைக்காக ரிக்வேத பாராயணம் நடைபெற்றது. திருவானைக்காவல், ஜகத்குரு வித்யாஸ்தானம் மற்றும் முத்தரசநல்லுார் தாலுகா பழூரில் அமைந்துள்ள ராமச்சந்திர அய்யர் நினைவு வேத வேதாந்த பாடசாலையில் பயின்று வரும் மாணவர்களின் வாயிலாக துவங்கி 300 நாட்களில் பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலம் சுல்லியா கிராமத்தில் உள்ள பரத்வாஜ ஆசிரமத்திற்கு காஞ்சி மடாதிபதி விஜயம் செய்துள்ளார். அவர் தண்டக்கிரம வேத பாராயணத்தை அர்ப்பணிப்புடன் நிழ்த்திய மாணவர்களுக்கு விக்ருதிஜ்ஞ எனும் உயரிய பட்டத்தை வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கும், அவர்களது ஆசான்களான சுப்ரமண்ய, நீலகண்ட, மணிகண்ட கனபாடிகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கினார்.