மகாதேவ அஷ்டமி; வைக்கத்து அப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்த சிவன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2024 10:11
கோவை; இடையர்பாளையம் வி.ஆர்.ஜி. கல்யாண மண்டபத்தில் வைக்கத்து அப்பன் அலங்காரத்தில் சிவன் அருள்பாலித்தார்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி மகாதேவ அஷ்டமி எனப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானே நேரடியாக அன்னதானம் செய்ததாக புராணம் கூறுகிறது. இந்த வைக்கத்து அஷ்டமி தினத்தில் அன்னதானம் செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த அன்னதானத்தில் சிவபெருமான் - பார்வதி தேவி கலந்து கொள்வார்கள் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் சிவபெருமானை வழிபட்டால் சகல விதமான நோய்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும். சிறப்பு மிக்க இந்த வைபவத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை பிராமன் சேவக் பவுண்டேஷன் என்ற அமைப்பு கோவை இடையர்பாளையம் வி.ஆர்.ஜி. கல்யாண மண்டபத்தில் மகாதேவ அஷ்டமி வழிபாட்டை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிவபெருமான் வைக்கத்து அப்பன் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.