Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ... பகவதி தேவநாயகி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு பகவதி தேவநாயகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கூட்டு பஜனை; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கூட்டு பஜனை; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

25 நவ
2024
12:11

மானாமதுரை; மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கூட்டு பஜனையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கடந்த கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதையடுத்து தினந்தோறும் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனைகள், படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை இரவு ஐயப்ப பக்தர்கள் சார்பில் கூட்டு பஜனை விழா நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கூட்டு பஜனையில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன், முருகன்,அம்மன், கருப்பண்ண சுவாமி பாடல்களை பாடி பஜனை செய்தனர். முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம்,திரவியம்,இளநீர்,நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பஜனை முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் நடந்தது.கூட்டு பஜனைக்கான ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமிகள்,பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar