பதிவு செய்த நாள்
25
நவ
2024
11:11
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கார்த்திகை மாத இரண்டாவது வார ஞாயிறு விழா, நேற்று நடந்தது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல்வளக்கில் நெய் தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் போலீசாரும், குளக்கரையை சுற்றி தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.