பதிவு செய்த நாள்
27
நவ
2024
10:11
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா வரும் டிச. 11ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி உள்ள செம்பை சங்கீத உற்சவம் நேற்று மாலை 6:45 மணிக்கு மாநில உயர் கல்வி, சமூக நீதித்துறை அமைச்சர் பிந்து துவக்கி வைத்தார். தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக குருவாயூர் தொகுதி எம்.எல்.ஏ., அக்பர், குருவாயூர் நகராட்சி தலைவர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். சங்கீத உற்சவர் துணை கமிட்டி கன்வினர் விஸ்வநாதன், தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்கள மனோஜ், ரவீந்திரன், ஸ்ரீமானவேதன் ராஜா, பிரஹமஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, பிரஹமஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு, நிர்வாகி வினயன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் வயலின் கலைஞர் குமாரி எ. கன்னியாகுமாரிக்கு செம்பை நினைவு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து குமாரி எ. கன்னியாகுமாரியின் சங்கீதக் கச்சேரி நடந்தது. இவருடன் எம்பார் கண்ணன், ஸ்ரீகாந்த் ஆகியோர் வயலின் வாசித்தனர். இவர்களுக்கு ட்ரிப்ளிகேன் சேகர் (தவில்), உடுப்பி ஸ்ரீகாந்த் (கஞ்சிரா), வைக்கம் கோபாலகிருஷ்ணன் (கடம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். மாநில அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான விருது பெற்ற வித்யாதரனை நிகழ்ச்சியில் கவுரவித்தன. 10 கிராம் எடை கொண்ட மூலவரின் உருவம் பதித்த தங்கப்பதக்கமும் ரூ. 50,0001, தகுதி சான்றிதழ் மற்றும் தகடு ஆகியவையாகும் செம்பை நினைவு விருது. 15 நாள் உற்சவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றன.