பதிவு செய்த நாள்
26
நவ
2024
06:11
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த வகையில், 35 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை நேற்று கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்தனர். பின் கோவில் ஊழியர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ஒரு கோடியே, 58 லட்சத்து, 47 ஆயிரத்தி, 551 ரூபாய் ரொக்கம், 776 கிராம் தங்கம், 9 கிலோ, 870 கிராம் வெள்ளி போன்ற பொருட்கள் இருந்தன.