பதிவு செய்த நாள்
29
நவ
2024
11:11
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் விழா சிறப்பாக துவங்கியது.
திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, கார்த்திகை மாதம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டு விழா நேற்று துவங்கியது. நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், இரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் வீதி உலா நடைபெற்றது. ஒன்பது நாட்கள், வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. விழாவில் பெரிய ஜீயர் ஸ்வாமி, சின்னஜியர் சுவாமி, கோவில் அலுவலர் ஜே. ஷியாமளா ராவ், வீரபிரம்மம் மற்றும் கோவில் துணை இ.ஓ., கோவிந்த ராஜன், கோவில் அர்ச்சகர்கள், கோவில் ஆய்வாளர் சலபதி, சுபாஷ், ஏ.வி.எஸ்.ஓ., சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.