விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துவாரபாலகி சிலை நிறுவப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2024 11:11
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலாம்பிகை சன்னதியில், துவாரபாலகி சிலைகள் நிறுவுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், காலை 9:00 மணியளவில் புனிதநீர் ஊற்றி, துவாரபாலகி சிலை நிறுவப்பட்டது. இதில், செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் சுப்ரமணியன், கோவில் நிர்வாக மேலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.