பதிவு செய்த நாள்
30
நவ
2024
10:11
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று, நேற்று முன்தினம் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, மாலை, உற்சவர் பிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மங்கல வாத்தியங்கள் முழங்க, நான்கு மாட வீதிகளில் வாண வேடிக்கைகளுடன் திருவீதி உலா சென்றார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.