Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் ... திருமுருகன்பூண்டியில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா திருமுருகன்பூண்டியில் 63 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1957ல் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் பல்கலையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1957ல் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் பல்கலையில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

30 நவ
2024
10:11

சென்னை; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957 முதல், 1967ம் ஆண்டுகளுக்குள், விலை மதிப்பில்லாத நான்கு சிலைகள் திருடப்பட்டன. தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசில், 2020ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதில், திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள், வெளிநாட்டை சேர்ந்த கடத்தல் கும்பலால், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சிலைகள், வெளிநாட்டில் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, திருமங்கை ஆழ்வார் சிலை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால், 1967ல் வாங்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. மற்ற சிலைகள், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. இந்த சிலைகள் திருடப்பட்டதுடன், அவற்றுக்கு பதிலாக, கும்பகோணம் கோவிலில் போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் உள்ள உண்மையான சிலைகளை மீட்கும் முயற்சியில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.


அதன்படி, அறிவியல்பூர்வமான ஆதாரங்களை தொகுத்து, நான்கு சிலைகளும் சவுந்தரராஜன் பெருமாள் கோவிலுக்கு சொந்தமானவை என, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை பிரதிநிதி ஒருவர், தமிழகம் வந்து சிலை தொடர்பான உண்மை தன்மையை ஆராய்ந்தார். புலன் விசாரணை அதிகாரி டி.ஸ்.பி., சந்திரசேகரன் சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று, அச்சிலை தமிழகத்தை சேர்ந்தது தான் என, ஆக்ஸ்போர்டு பல்கலை பிரதிநிதிகளுக்கு, அந்த பிரதிநிதி விரிவான அறிக்கை சமர்ப்பித்தார். மேலும், தமிழக கோவிலில் இருந்து சட்டவிரோதமாக சிலை கடத்தப்பட்டது என்பதையும் ஏற்றுக்கொண்டார். அச்சிலையை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப, அப்பல்கலை ஒப்புக்கொண்டு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கான செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, திருமங்கை ஆழ்வார் சிலை, ஓரிரு மாதங்களில் தமிழகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகளை, அமெரிக்காவில் இருந்து மீட்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar